தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் கோட்டங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் கோட்டம் சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (3.10.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடையநல்லூர் கோட்டம் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் நாளை (3.10.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணைமின் நிலையங்களில் நாளை (3.10.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பின்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்துகிருஷ்னபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-16




