காந்திநகர், பிரதமர் மோடி நேற்று குஜராத்தின் சனந்தில், சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் (OSAT) என்ற செமிகண்டக்டர் தொழிற்சாலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:- தொடக்க விழா தனது இலக்குகளை அடைவதில் தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த தொடக்க விழா ஒரு சான்றாக விளங்குகிறது. நாடு தனது வலுவான தீர்மானங்களை எவ்வித தயக்கமுமின்றி உறுதியான செயல்களாக தொடர்ந்து மாற்றி வருகிறது. முக்கிய நோக்கம் நாட்டை மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்றுவது அரசின் முக்கிய நோக்கம். உள்நாட்டு சிப் வடிவமைப்பு, உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தி என்ற நோக்கமே, இந்த மூன்றாவது பெரிய ஆலையில் வணிக ரீதியான சிப் பேக்கேஜிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டி காட்டினார். இந்தியாவில் வடிவமைப்பு, இந்தியாவில் தயாரிப்பு என்ற அடிப்படை கொள்கையுடன் நாடு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. செமிகான் இந்தியா திட்டம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. சாதனை புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆலையானது, சர்வதேச ஒத்துழைப்பிற்கு மிகச்சிறந்த கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. இந்திய நிறுவனங்களுடன், ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாட்டின் முன்னணி தொழில் கூட்டாளர்கள் கைகோர்த்து இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த கூட்டு முயற்சி பாராட்டுக்குரியது. ஒருங்கிணைந்த சூழல் உண்மையான உற்பத்தி திறன் என்பது தனித்தனி தொழிற்சாலைகளில் இருந்து மட்டும் உருவாவதில்லை. ஒரு முழுமையான மற்றும் விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, தைவானின் சின்சு அறிவியல் பூங்கா, ஜப்பானின் சுகுபா அறிவியல் நகரம் போன்ற பிரம்மாண்ட தொழில்நுட்ப மையங்கள் அனைத்தும் இத்தகைய ஒருங்கிணைந்த சூழல் அமைப்பாலேயே உருவெடுத்தன. உள்நாட்டு சூழலமைப்பு ஒரு வலுவான உள்நாட்டு சூழலமைப்பு வேகமாக உருவாகி வருவதை விவரித்த பிரதமர், மைக்ரான், கெய்ன்ஸ், சிஜி செமி போன்ற முக்கிய நிறுவனங்கள் இப்பகுதியில் வெறும் சில மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் உற்பத்தியை தொடங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் வகுக்கப்பட்ட நீண்டகால தொழில்நுட்ப கொள்கைகளிலிருந்து உருவாகும், ஒரு முன்னேற்றமே தற்போதைய விரிவாக்கம் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மின்னணு புரட்சியின் இயல்பான அடுத்த கட்டம் இதுவாகும்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/prime-minister-modi-inaugurated-a-semiconductor-plant-in-sanand-gujarat




