மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அதில் அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியது. அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோட்டை மலையில் இருந்து குதித்த மல்யுத்த வீராங்கனையின் பெயர் அஸ்வினி மனோகர் பால் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் பள்ளத்தாக்கில் குதித்ததில் அஸ்வினியும், அவரது ஐந்தரை வயது மகன் அஜிங்க்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்கொலை செய்து கொண்ட மலை அவரது இரண்டரை வயது இரட்டை மகள்களில் ஒருவரான கிராந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மற்றொரு மகள் வீரா படுகாயமடைந்து தற்போது தாராசிவ் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. 5 தங்க பதக்கங்கள் அஸ்வினி பால் மல்யுத்த வட்டாரங்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார். அவரை அனைவரும் "மகாராஷ்டிராவின் புலி" என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது விளையாட்டு வாழ்க்கையில், அவர் தேசிய அளவில் ஐந்து தங்கம் மற்றும் ஆறு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். அவரது தற்கொலை மகாராஷ்டிரா மற்றும் விளையாட்டு சமூகத்திடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்வினி தனது கணவர் மற்றும் மாமியாரால் தொடர்ந்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அஸ்வினியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார்கள் மற்றும் சம்பவத்திற்கான சூழ்நிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஸ்வினி பால் தனது மூன்று குழந்தைகளுடன் நல்துர்க் கோட்டையைப் பார்ப்பதற்காக லத்தூர் மாவட்டம் நிலங்கா தாலுகாவில் உள்ள அம்புல்காவிலிருந்து சென்றிருந்தார். அவரது கணவர் பெயர் மனோகர் என்றும், அவர் ஆட்டோ ஓட்டுகிறார் என்றும் தெரிய வந்துள்ளது. கணவரின் ஆலோசனையின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வினி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கடந்த மூன்று மாதங்களாக அவர் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அஸ்வினி பால் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/national-level-wrestler-jumps-into-a-100-foot-gorge-with-her-three-children




