மும்பை, மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மணிக்கணக்கில் 'சாட்' செய்துவந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி அந்த சிறுவன், சிறுமியை தனியாக சந்தித்து பேச வேண்டும் எனக்கூறி அப்பகுதியில் உள்ள சாவடி ஒன்றுக்கு வர சொன்னான். இதை நம்பி சிறுமியும் அங்கு சென்றாள். ஆனால் அங்கு வந்த சிறுமியை, சிறுவன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு மறைவான பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். இந்த நிலையில் சிறுமியின் உறவினர் ஒருவர் அவரது ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி சிறுமியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறி கதறி அழுதுள்ளார். இதைய டுத்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசீல் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/dire-consequences-of-social-media-habits-two-boys-arrested-for-gang-raping-a-minor-girl




