தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பழ.நெடுமாறன் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்பது குறித்து ஓராண்டுக்குப் பிறகு கருத்து கூறுவதுதான் சரியாக இருக்கும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றியதை வரவேற்கிறோம். நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் ஜன நாயகன் படம் பற்றி கருத்து கூற முடியாது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். இதனை நான் 2009-ம் ஆண்டு முதல் கூறி வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார். தற்போது வெளியே வருவதற்கான சர்வதேச சூழ்நிலை இல்லை. பிரபாகரன் மகள் ஏற்கனவே தொலைக்காட்சி முன்பு தோன்றி பேசி உள்ளார்'' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/pazha-nedumaran-says-there-is-no-international-matter-for-prabhakaran-to-emerge




