திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் சிவகார்த்திகேயன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 3 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 முதல் 2029 காலத்திற்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் நடைபெறவிருந்தது. ஆனால், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் திடீரென மறைந்ததால் அந்த தேர்தல் அம்மாதம் மத்தியில் நடந்தது. இதில் சேரன் அணியான ‘நம்ம பாக்யராஜ்’ வெற்றி பெற்றது. இதையடுத்து தலைவராக சேரன், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வெற்றி பெற்ற நிர்வாவிகள் புதியதாக பொறுப்பேற்று சங்கத்தை வழி நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களது சங்கத்தில் இணையாதவர்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர். லெஜண்ட் சரவணன் கவுரவ உறுப்பினராக சமீபத்தில் இணைந்தார். இந்நிலையில், தற்போது திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் சிவகார்த்திகேயன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார். இது குறித்து சங்கத் தலைவர் சேரன் எக்ஸ் தளத்தில், “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகர்த்திகேயன். இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்வது தொடர்பாகவும் சிவகார்த்திகேயனை எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக நானும், என்னுடன் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குனர் செல்வபாரதி, இயக்குனர் KBB நவீன் ஆகியோர் சந்தித்தோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனைகளும் வழங்கினார். விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் எங்களை வழி அனுப்பி வைத்ததை மகிழ்வாக பகிர்கிறோம். தொடரட்டும் வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்.” என பதிவிட்டுள்ளார். *தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் திரு. சிவகர்த்திகேயன்* இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் திரு சிவகார்த்கிகேயன் அவர்களை எழுத்தாளர்கள் சங்கத்தலைவராக நானும், என்னுடன்… — Cheran Pandiyan (@CheranDirector) September 22, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-joins-south-indian-film-writers-association




