திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை சிக்கியிருந்தனர். இந்த வழக்கில் கைதான சுவப்னா சுரேஷ். 15 மாத சிறைக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜாமீனில் இருந்து வருகிறார். இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் சுவப்னா சுரேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தங்கம் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு தடை ஏற்பட்டால், என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளேன். இந்த வழக்கில் ஒருவரை மட்டும் விசாரிப்பதில் பயன் இல்லை. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை நடத்த வேண்டும். முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினரின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன். பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க தற்போதைய முதல்-மந்திரி வி.டி.சதீசன் தயாராக வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அது சமூகத்தில் வேறு விதமாக பேசப்படும். தங்கம் கடத்தல் வழக்கில் தன்னை பயன்படுத்தியதை போல் தற்போதைய வழக்கிலும் புதிய முகம் விரைவில் வெளிவரும். தங்கம் கடத்தல், டாலர் கடத்தல், சி.எம்.ஆர்.எல்., எக்சாலோஜிக் முதலான அனைத்து ஊழல், மோசடி குற்றங்களின் செயல்பாடு ஒரே மாதிரியானது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/i-will-expose-the-corruption-of-pinarayi-vijayans-family-swapna-suresh




