பீஜிங் சீனாவில் 8 மாத குழந்தையுடன் விமான பயணம் செய்த தந்தையின் செயலால் பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். சீனாவில், சென் என்ற நபர் தன்னுடைய 8 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் குவாங்சி பகுதிக்கு விமானத்தில் பயணித்து உள்ளார். அவருடைய பயணத்தின்போது, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக செய்த சம்பவம் சக பயணிகளை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் காற்றழுத்த மாற்றம் ஏற்படும். இதனால், குழந்தை அழக்கூடும். சில சமயங்களில் பசிக்காக, இரவு நேர பயணம் போன்றவற்றாலும் குழந்தை அழும். அது மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தலாம். 100 ஜோடி இதனை கவனத்தில் கொண்டு, கையோடு 100 ஜோடி காது அடைப்பான்களை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி, எடுத்து சென்ற அவர், அதனை பயணிகளுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதனால், நெகிழ்ந்து போன பயணிகளில் பலர், அதனை வேண்டாம் என மறுப்பு தெரிவித்தனர். குழந்தை அழுவது தங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தி விடாது என்று கூறி அதனை ஏற்க மறுத்து விட்டனர். இதனால், 100 ஜோடி காது அடைப்பான்களில் 20 மட்டுமே பயணிகளிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மீதமுள்ள காது அடைப்பான்களை, திரும்பி வரும்போது பயணிகள் பயன்படுத்துவதற்காக வைத்து கொள்ளுங்கள் என விமான பணிப்பெண்ணிடம் சென் கொடுத்து விட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/flight-travel-with-child-passengers-resilient-due-to-fathers-action




