டெல்லி, ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சுருச்சி இந்தர் சிங் மற்றும் கமல்ஜீத் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அதேபோல், ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய அணியினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், கமல்ஜீத் மற்றும் சுருச்சி இந்தர் சிங்கிற்கு ஒரு பொன் முடிவு! இந்த ஜோடி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்றது. “துல்லியம் மற்றும் கூட்டாண்மையின் அழகான காட்சி. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனாதிபதி வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், உங்கள் பாராட்டத்தக்க செயல்திறனும் சிறந்த கூட்டு முயற்சியும் சுடுதல் மைதானத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளன. தொடர்ந்து வெற்றி பெற உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/aasiya-vilayaatu-thuppaakki-suduthalil-indhiyaavukku-thangam-janadhipadhi-murmu-vaalthu




