மாஸ்கோ, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு ரஷியா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ரகசியமாக நடந்த விசாரணை பிரபல போர்ப்ஸ் ரஷியா பத்திரிகையில் அறிவியல் மற்றும் மருத்துவ பிரிவில் தர்யா ஷிபச்சேவா பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ரகசியமாக பண உதவி செய்ததாக கூறி, கடந்த 2025 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் ரகசியமாக நடந்து வந்தது. நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தர்யா ஷிபச்சேவாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனையை குறைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். ஆனாலும், நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததால், தீர்ப்பை கேட்டு அவர் நீதிமன்றத்திலேயே கடும் அதிர்ச்சியடைந்தார். பழிவாங்கப்படுகிறாரா? 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அதிபர் புதின் அரசு பல்வேறு கடுமையான தணிக்கை சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்ப்புக்கு முன்பாகவே, ரஷியாவில் ஏற்கனவே பல பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு உளவு பார்த்ததாகவும், உக்ரைனுக்கு உதவியதாகவும் கூறி பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் உலக அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/12-years-jail-for-journalist-in-treason-case




