சென்னை, பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற அக்டோபர் 5-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல, எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும், சிலர் தங்களது சொந்த வாகனங்களில் பயணம் செய்து வருவதால் பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/quarterly-holidays-people-flock-from-chennai-to-their-hometowns




