கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த 'யூத்' திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்த இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக, சம்பளமின்றி இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷும் இசையமைத்திருந்தார். இப்படத்தைப் பார்த்த பிறகு நடிகர் சூர்யா, சிம்பு ஆகியோர் 'யூத்' படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மம்மூட்டி தொடங்கி ரிஷப் ஷெட்டி வரை பலரும், 'யூத்' திரைப்படம் பற்றியும், அதில் நடித்த நடிகர்கள் தொடர்பாகவும் பாராட்டியிருந்தனர். சமீபத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி, "நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும் புன்னகையோடு ரசித்துப் பார்த்தேன். 'யூத்' திரைப்படம் காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிறைந்துள்ளது. இது அனைத்துப் பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அழகான படைப்பு. கென் கருணாஸ், ஒரே ஆளாக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, மிக நேர்த்தியான நடிப்பையும் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. சூரஜ் வெஞ்சாரமூடு சார், தேவதர்ஷினி மேடம் மற்றும் அந்த நண்பர்கள் பட்டாளம் என ஒவ்வொரு நடிகரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விக்கி என ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் குழுவின் பணியும் அற்புதம். தம்பி கென், நீ சினிமா உலகிற்கு ஒரு சொத்து!" எனக் குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். வெற்றிமாறனுடன் கென் அதனைத் தொடர்ந்து, தற்போது கென் கருணாஸ் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு பற்றி கென் கருணாஸ் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், "ரிஷப் ஷெட்டி சாரைச் சந்தித்தேன். 'உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்' என்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்வது போலவே இருந்தது. எனது கனவுகளை நனவாக்கிய 'யூத்' (Youth) படக்குழுவிற்கு நன்றி. கடவுளுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். ``தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" - 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/karunas-son-ken-karunas-next-movie-exclusive-update




