நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிதாக பூச்சியினம் ஒன்று குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. ஒவ்வொரு வீடுகளிலும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் பறக்கும் பூச்சிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிகட்டு வருகிறது. கண், காது, மூக்கு எனப் பூச்சிகள் புகுவதால் நடமாடி முடியாமல் திணறி வருகின்றனர். புதிதாகக் காணப்படும் இந்தப் பூச்சியினம் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்தாத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து குன்னூர் அருகில் உள்ள சேலாஸ் பகுதி மக்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படையெடுக்கும் பூச்சிகள் இது குறித்து தெரிவித்த வணிகர்கள், "வீடுகள், கடைகள் என ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான பூச்சிகள் பறந்து வருகின்றன. இவைகள் கடிப்பதில்லை என்றாலும், உணவு, குடிநீர் என எல்லாவற்றிலும் விழுகின்றன. இதனால் சாப்பிட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையே முடிங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அப்போதும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவோம்" என்றனர். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டு வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/environment/ooty-normal-life-disrupted-by-insects-shop-closure-protest




