பெங்களூரு, கோலன அக்ரஹாரா-நாகவரா இடையே இளஞ்சிவப்பு வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 12-ந் தேதி நடக்க உள்ளது. மெட்ரோ ரெயில் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. செல்ல கட்டா-ஒயிட்பீல்டு இடையே ஊதா நிறப்பாதையிலும், மாதவரா முதல் சில்க் நிறுவனம் வரை பசுமைப்பாதையிலும், பொம்மசந்திரா முதல் ஆர்.வி.ரோடு வரை மஞ்சள் நிறப்பாதையிலும் என மொத்தம் 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணிக்கிறார்கள். இந்த நிலையில் காலேன அக்ரஹாரா முதல் நாகவரா வரையிலான இளஞ்சிவப்பு (பிங்க்) நிறப்பாதையில் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 21.3 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதையில் 7.5 கிலோ மீட்டர் உயர்மட்ட பாதையிலும், 13.8 கிலோ மீட்டர் பூமிக்கடியிலும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் இதனால் கோலன அக்ரஹாரா-நாகவரா இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்த பி.எம்.ஆர்.சி.எல். அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற 12-ந்தேதி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது. ரெயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளார். இந்த சோதனை வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது. அதையடுத்து பாதுகாப்பு கமிஷனர் சான்றிதழ் அளித்த பிறகு செப்டம்பர் மாதத்தில் இருந்து இளஞ்சிவப்பு பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/bengaluru-metro-rail-pink-line-to-undergo-test-run-on-august-12




