திருப்பத்தூர், திருப்பத்தூரில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். விபத்து இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பள்ளி வேன் மீது சாலையில் எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 5 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை - பெங்களூரு சாலையில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppathur-school-van-lorry-accident-5-students-injured




