தற்போது ஃபிளிப்கார்ட் வீட்டுக்குத் தேவையான அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை மற்றும் டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது. புத்தக விற்பனையிலிருந்து தொடங்கி பயணச் சேவைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை எனப் ஃபிளிப்கார்ட் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக உணவு டெலிவரியில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. இது குறித்து ஃபிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தங்கள் நிறுவனம் ஒரு முன்னோட்டத் திட்டமாக உணவு விநியோகத் துறையில் களம் இறங்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கல்யான் கிருஷ்ணமூர்த்தி அவர் மேலும் கூறுகையில், ''சந்தை நிலவரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எதுவும் முடிந்துவிடவில்லை. வரலாற்றைப் பார்த்தால் குறிப்பாக நமது துறையில் யாரோ ஒருவர் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்துவார், மற்றொருவர் சந்தை முறையை மாற்றி அமைப்பார். இறுதியில் சந்தை விரிவடையும். புதிய நிறுவனங்கள் சந்தைக்கு வந்துகொண்டேதான் இருக்கும். இந்தியாவின் இ-காமர்ஸ் தொழில் நீண்ட தூரம் வந்துள்ளது. எண்ணிக்கை தற்போது கோடிக்கணக்கில் உள்ளது. இது ஆரம்பத்தில் புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள், பின்னர் சில பிராண்டட் எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிராண்டட் ஃபேஷன் ஆகியவற்றில் விரிவடைந்துள்ளது. யாராவது ஒரு குறிப்பிட்ட தொழிலையோ அல்லது வணிக மாதிரியையோ தொடங்கினாலும் பரவாயில்லை, இரண்டு ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு யாராவது வந்தாலும், அவர்கள் நன்றாகச் செயல்பட்டால், அவர்கள் கவனம் செலுத்தினால், அவர்கள் எளிதாக வெற்றி பெறலாம்," என்று தெரிவித்தார். இந்தச் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன், முதலில் இதனை பெங்களூருவில் தொடங்க ஃபிளிப்கார்ட் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சியைத் தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக தனி மொபைல் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. உணவு விநியோகச் சந்தையில் Zomato சுமார் 57 சதவீதப் பங்கையும், Swiggy 43 சதவீதப் பங்கையும் கொண்டிருந்தன. கொலஸ்ட்ரால். உணவு, பரிசோதனைகள் முதல் அலார அறிகுறிகள் வரை. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/business/flipkart-to-enter-food-delivery-sector-standalone-app-to-launch-soon




