இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாக சென்னை விளங்குகிறது. இதன் காரணமாக "இந்தியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் விளங்குகிறது. அந்நகரம் வாகன தொழிலுக்கு புகழ் பெற்றது. அதேபோல் இந்தியாவில் வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடம் பெற்றுள்ளதால் இந்த பெயரில் குறிப்பிடப்படுகிறது. வாகன உற்பத்தியில் முக்கிய இடம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும். உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கிண்டி, அம்பத்தூர் போன்ற பகுதிகள் சென்னையின் வாகன தொழில்துறையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு வகையான வாகனங்கள் உற்பத்தி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணிகள் கார்கள் மட்டுமின்றி, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்களின் உதிரிபாகங்களும் தயாரிக்கப்படுகின்றன. இத்துடன் வாகன வடிவமைப்பு, சோதனை மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு பணிகளுக்கும் தேவையான தொழில்துறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு சென்னையின் வாகன தொழில் உள்நாட்டு சந்தைக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு சந்தைக்கும் முக்கிய பங்க ளிப்பை வழங்குகிறது. சென்னையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை துறைமுகம் உள்பட சில துறைமுகங்கள் வாகன ஏற்றுமதிக்கு முக்கியமான போக்குவரத்து கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் டெட்ராய்ட் வாகன உற்பத்தி நிறுவனங்கள், உதிரிபாகத் தொழிற்சாலைகள், திறமையான தொழிலாளர்கள், தொழில்நுட்ப வசதி கள், சாலை மற்றும் துறைமுக இணைப்பு ஆகியவை ஒருங்கிணைந்திருப்பது சென்னையின் மிகப்பெரிய பலமாகும். இதன் காரணமாகவே சென்னை இந்தியாவின் முக்கியமான வாகனத்தொழில் மையமாக உருவெடுத்து, “இந்தியாவின் டெட்ராய்ட்" என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/from-factories-to-ports-this-is-the-strength-of-chennai-the-detroit-of-india




