பாலகிருஷ்ணாவின் 111-வது படத்திற்கு ‘டாடா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. DADAதெலுங்கு திரை உலகில் இளம்கதாநாயகர்களுடன் போட்டி போட்டு நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘அகண்டா-2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் படங்களாக அமைகின்றன. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவ் மகனாவார். பாலைய்யாவின் மிரட்டலான ஆக்சன் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக உள்ளார். ரித்தி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் 111-வது படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், சுவாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கடந்தாண்டு நவம்பர்18ல் சிறப்பு வீடியோவை வெளியிட்டிருந்தனர். பாலகிருஷ்ணாவும் நயன்தாராவும் ஏற்கனவே ஸ்ரீராமராஜ்யம், சிம்ஹா, ஜெய்சிம்ஹா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பாலைய்யாவின் 111-வது படத்தின் டைட்டில் இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் 111-வது படத்திற்கு ‘டாடா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/balakrishnas-111th-film-titled-announced




