மத்திய கிழக்கில் ஈரான் போரைத் தாண்டி சவூதி அரேபியா - ஏமனின் ஹூதிப் படைகளுக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜூலை மாதம் தொடங்கிய இந்த மோதல் போக்கு தீவிரமாக இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹூதிகள் சவூதி மீது ஏவுகணைகள், டிரோன்கள் போன்ற வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்களின் புனிதத் தலங்கள் மெக்கா - மதீனா. ஹூதிகளின் வான்வழித் தாக்குதலையொட்டி, மெக்கா நகரத்திற்கு வரலாற்றிலேயே முதன்முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவூதி BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா? சவூதியின் எச்சரிக்கை சவூதியின் பாதுகாப்புப் படை, “அவசரகால தேசிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்திடமிருந்து உங்களுக்கு எச்சரிக்கைச் செய்தி வந்தால் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும். திறந்தவெளிகள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளை விட்டுத் தள்ளி இருக்கவும். வெளியில் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள கட்டடத்திற்குள் செல்லவும்” போன்ற எச்சரிக்கையைத் தனது எக்ஸ் பக்கத்தில் சவூதியில் இருக்கும் மக்களுக்குச் சொல்லியிருந்தது. இந்தப் பதிவு நேற்று மதியம் பதிவிடப்பட்டிருந்தது. அடுத்த 7 நிமிடங்களிலேயே, “மெக்கா நகரில் இருந்த ஆபத்து விலகியது” என்று சவூதி பாதுகாப்புப் படை தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது. ஏமனின் பதில் சவூதியின் இந்தக் கூற்று குறித்து ஹூதிகள், “மெக்கா நகர் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்ட, காலாவதியான பொய்களாகும். இவை இனி யாரையும் ஏமாற்றப் போவதில்லை” என்று கூறியுள்ளனர். ஈரான் போரால் சொந்த நாட்டில் ட்ரம்பிற்கு வந்த 'வினை'; இதைச் சமாளிக்க ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/saudi-arabia-issues-first-mecca-alert-amid-houthi-attacks




