சென்னை, பூந்தமல்லி-வடபழனி இடையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் அக்டோபர் 11-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் உள்ள கமலாலயத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் மாநில தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, டால்பின் ஸ்ரீதரன், நரேந்திரன், அனைத்து பிரிவுகளுக்கான மாநில அமைப்பாளர் கே.டி.ராகவன் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-of-bjp-state-functionaries-ahead-of-prime-minister-modis-visit-to-chennai




