மத்திய மாநில அரசுகள் நடத்தும் குரூப் தேர்வுகள், நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய சம்பவங்களை பார்த்திருக்கிறோம். அரசு தொடக்கப்பள்ளி (ஃபைல் படம்) ஆனால், ஒன்றாம் வகுப்பு காலாணடுத்தேர்வு வினாத்தாள் வெளியாகிய விவகாரம் தற்போது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கியது. இதில் ஒன்றாம் வகுப்புக்கு ஆங்கிலப் பாடத் தேர்வு இன்று (செப்டம்பர் 21) நடைபெறுகிறது. இதற்கான வினாத்தாள் மூடி முத்திரையிடப்பட்ட உறைகளில் அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகியதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு இதையடுத்து தொடக்க கல்வித்துறையால் ஆங்கிலப் பாடத்துக்கு மீண்டும் புதிதாக வினாத்தாள் தயாரித்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை பெற்றுக்கொண்டு அன்றைய தினமே தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக ஆசிரியர் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி அலுவலக தரப்பில் கேட்டபோது, 'ஒன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாட வினாத்தாள் வெளியாகியதாக தகவல் வந்தது. ஆனால், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் மாற்று வினாத்தாள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது' என்றனர். 'ஆல் பாஸ்' செய்யப்படும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே வெளியிடுவதால் யாருக்கு என்ன லாபம்? இது என்ன, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வா? முன்கூட்டியே வினாத்தாளை தெரிந்துகொண்டு தேர்வை எழுதும் அளவுக்கு ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் பக்குவமடைந்தவர்களா? அவசர அவசரமாக மறு வினாத்தாள் தயாரித்ததன் உண்மையான காரணம் என்ன? என்ற பல்வேறு கேள்விகளை பெற்றோர்கள் எழுப்பி வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறைதான் பதில் சொல்ல வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/education/first-standard-question-paper-leak




