சென்னை, இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு பின்னர் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக முதல்-அமைச்சர் விஜய் முதல்-முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நீண்ட காலத்திற்கு தொடரும். முதல்-அமைச்சர் தனது உரையில் மிகத் தெளிவாக எல்லாவற்றையும் கூறிவிட்டார். மக்கள் தன்னுடன் நிற்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/all-of-tamil-nadu-is-happy-finance-minister-maria-wilsons-interview




