மும்பை, வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் திரட்டப்பட்ட டாலர்களை ரூபாயாக பரிமாற்றம் செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சலுகை அளித்துள்ளது. சிறப்பு வைப்புத் திட்டம் வெளிநாடுகளில் இருந்து டாலர் வரத்தை அதிகரிப்பதன் மூலம் அன்னிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தவும், ரூபாய் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் ரிசர்வ் வங்கி, மானியத்துடன் கூடிய சிறப்பு வைப்புத் திட்டத்தை அறிவித்தது. இதன் காலக்கெடு 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இத்திட்டத்தின்கீழ், வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் திரட்டிய டாலர்களை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து ரூபாயாக 'ஸ்வாப்' முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்காக வங்கிகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒருதடவைக்கு மேல் பயன்படுத்தலாம் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 6 ஆயிரத்து 500 கோடி டாலர் கிடைத்துள்ளது. டாலர்கள் குவியும்போது, அவற்றை மாற்றுவதற்கான நாள்வரை வங்கிகள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், விலை ஏற்ற இறக்க அபாய தடுப்பு செலவுகளையும் வங்கிகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய சலுகையை அறிவித்துள்ளது. 10 கோடி டாலர்களுக்கு மேற்பட்ட பரிமாற் றத்துக்கு வாரத்துக்கு ஒருதடவைக்கு மேல் பரிமாற்ற வசதியை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது. நெகிழ்வுத்தன்மை ஆனால், 10 கோடி டாலருக்கு குறைவான பரிமாற்றத்துக்கு ஏற்கனவே இருப்பதுபோல் வாரத்துக்கு ஒருதடவை மட்டுமே பரிமாற்ற வசதியை பயன்படுத்த முடியும் என்று தெளிவுப டுத்தி உள்ளது. சிறப்பு வைப்புத் திட்ட காலக்கெடு முடிவடைய இருக்கும் போது, உபரி டாலர்களை கையாள வங்கிகளுக்கு இச்சலுகை நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் என்று கருதப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/trending/reserve-bank-offers-concession-to-banks-for-converting-dollars-into-rupees



