கடலூர், கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் மருவாய் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற அவர், விவசாயிகளிடம் தனது செல்போனில் இருந்து நேரடியாக பேசினார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாக அமைச்சர் வெங்கடரமணனிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் உத்தரவின்பேரில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உடனடியாக பட்டியல் எழுத்தர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/நெல்-மூட்டைக்கு-ரூ50-லஞ்சம்-அமைச்சரிடம்-புகார்-அளித்த-விவசாயி-பட்டியல்-எழுத்தர்-உடனடியாக-சஸ்பெண்ட்




