உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புத்தனந்தல் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் கரையோரம் சுடுகாட்டில் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று இருந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் களமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புக்கூட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணை இருப்பினும் அந்த எலும்புக்கூடு ஆணா? பெண்ணா? என்ற விவரம் உடனடியாக தெரிய வில்லை. இருப்பினும் அந்த எலும்புக்கூடு யாருடையது? யாராவது கொலை செய்து விட்டு நீண்ட நாட்கள் கழித்து இங்கு வந்து எலும்புக்கூட்டை வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/human-skeleton-found-wrapped-in-plastic-police-investigating




