புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தொடர் போராட்டங்களின் விளைவாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை அமைச்சகம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரகலாத் ஜோஷி இன்று மத்திய கல்வி மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள பிரகலாத் ஜோஷி, "இன்று நான் மத்திய கல்வி மந்திரியாக பொறுப்பேற்றேன். என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணிவுடனும், ஆழ்ந்த கடமை உணர்வுடனும் இப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/pralhad-joshi-assumed-charge-as-union-education-minister




