YouTube-ல் வீடியோ போட்டால் views வரணும், subscribers அதிகமாகணும் என்பதுதான் பல Content Creators-ன் ஆசை. ஆனால், அதற்காக ஒரு 9 வயது சிறுவன் செய்த காரியம் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது! அமெரிக்காவைச் சேர்ந்த Mike என்ற சிறுவன் ‘Mighty Mike Plays’ என்ற YouTube சேனலில் Minecraft மற்றும் Roblox கேமிங் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். வீடியோக்களுக்கு போதிய views வராததால் அவர் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது தந்தை Dave முதலில் ஒரு வீடியோவை YouTube விளம்பரமாக promote செய்ய சுமார் 20 டாலர் செலவு செய்திருக்கிறார். அப்போது பயன்படுத்திய company credit card, Google account-ல் save செய்யப்பட்டிருந்தது. வீடியோ அதன்பிறகு, விளம்பரத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பார்த்த 9 வயது Mike, அதிகமாக செலவு செய்தால் அதிக views கிடைக்கும் என நினைத்து, அடுத்த சில வாரங்களில் தொடர்ந்து விளம்பரங்களை இயக்கியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். முடிவில்… சுமார் $118,000! இந்திய மதிப்பில் சுமார் ₹1.13 கோடி விளம்பரச் செலவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சில வீடியோக்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான views-ஐ பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்குப் பிறகு, குடும்பம் சேனலை நிறுத்துவது குறித்து முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெளியான தகவலின்படி, இந்தச் சம்பவத்தால் தந்தையின் வேலைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு Click… ஒரு பாடம்! குழந்தைகள் பயன்படுத்தும் online accounts-ல் saved payment details, parental controls, spending limits ஆகியவற்றை கவனிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது. Views-க்காக பணம் செலவிடுவது எளிதாக இருக்கலாம்… ஆனால் ஒரு Click-க்கு பின்னால் இருக்கும் செலவைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/9-year-olds-one-click-costs-father-113-crore




