தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதா பேராலயம் தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான விண்ணேற்பு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உள்ளூர் விடுமுறை காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. சனிக்கிழமை வேலை நாள் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பின்னர் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-district-local-holiday-on-14



