சென்னை, சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு. தவெக எம்.எல்.ஏவான இவருக்கு கடந்த 9 ஆம் தேதி அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை ஐசியூவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஓரிரு நாட்களில் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஎஸ் பாபு உடல் நிலையை தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய்யும் விஎஸ் பாபு உடல் நிலை பற்றி போனில் கேட்டறிந்ததாக அமைச்சர் அருண்ராஜ் கடந்த வாரம் கூறியிருந்தார். நேரில் நலம் விசாரிப்பு இந்த நிலையில், விஎஸ் பாபு உடல் நிலை குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் விஜய் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்களிடம் விஎஸ் பாபு உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். முன்னதாக, விஎஸ் பாபு உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-visits-the-private-hospital-to-inquire-about-vs-babus-health-condition




