துபாய், சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டி அட்டவணையை மாற்றியமைக்கும் வகையில், 2027 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில் முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான டி20 சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இருதரப்பு ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் அடுத்த கிரிக்கெட் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. தற்போதைய சுழற்சி 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. உலக அளவில் டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி, ஐ.சி.சி.யின் சர்வதேச போட்டி அட்டவணையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதனால் அடுத்த சுழற்சியில் முழு உறுப்பினர் அணிகளுக்கு இடையே அதிக டி20 சர்வதேச போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சர்வதேச கிரிக்கெட் அட்டவணையில் இருதரப்பு தொடர்கள், ஐ.சி.சி. தொடர்கள் மற்றும் உள்ளூர் டி20 லீக் போட்டிகள் என பல்வேறு போட்டிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருதரப்பு ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/more-t20-matches-in-the-202731-period-will-bilateral-odi-matches-decrease-icc-considers-the-move




