சென்னை, மது போதையில் தகராறு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் கொற்கை விலக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் முருகவேல் (வயது 44). மெக்கானிக்கான இவர் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடந்த 31.1.2021 அன்று இரவு மது குடித்து விட்டு ஏரல் பாரதியார் ரோட்டில் தள்ளுவண்டி கடையில் தகராறு செய்தார். இதுகுறித்து ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. மோட்டார் சைக்கிள் பறிமுதல் உடனே போலீஸ்காரர் பொன் சுப்பையா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, குடிபோதையில் இருந்த முருகவேலின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலு (55) மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி உள்ளனர். மறுநாள் விசாரணைக்கு ஆஜராகி மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லுமாறு கூறி அனுப்பி உள்ளனர். லோடு ஆட்டோவை ஏற்றி கொலை பின்னர் 1.2.2021 அன்று அதிகாலை 12.45 மணிக்கு கொற்கை நாலுமுக்கு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு, போலீஸ்காரர் பொன் சுப்பையா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லோடு ஆட்டோவில் முருகவேல் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் சத்தம் போட்டு விட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், தான் திருடி வைத்து இருந்த லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்று, வாழவல்லான் ஊர்காத்த சுவாமி கோவில் முன்பு சென்று கொண்டிருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் பலத்த காயம் சப்-இன்ஸ்பெக்டர் பாலு பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் பொன் சுப்பையா காயம் அடைந்தார். ஆயுள் தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட முருகவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-killed-police-sub-inspector-by-loading-auto-gets-life-sentence




