திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 66 ஆயிரத்து 437 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 771 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 45 லட்சம் ஆகும். அன்று 3 லட்சத்து 79 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட் சத்து 43 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத் துவமனையில் 3 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்றனர். திருமலையில் நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி சிலாத்தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரி கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/devotees-wait-for-24-hours-for-free-darshan-at-the-tirupati-temple




