துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன இலங்கை - வங்காளதேசம் இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்காளதேசம் 114 ரன்கள் இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷ்ஹானா மொஸ்டிரி அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். அதேவேளை, சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீராங்கனை சமுதி பிரபோதா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை வெற்றி இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வங்காளதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா 48 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அதேவேளை, வங்காளதேச வீராங்கனை மருபா அக்தர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-sri-lanka-stun-bangladesh-for-big-win




