குமரி, குமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில் சமீபகாலமாக காட்டு யானைகள் அட்டகாசம் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கீரிப்பாறை அருகே சாலையோரத்தில் காட்டு யானை ஒன்று சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- கீரிப்பாறை அருகே பல தனியார் தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானை கள் அடிக்கடி வந்து செல்கின்றன. வனத்துறையினர் அந்த யானைகளை காட்டு பகுதிக்குள் விரட்டிவிடுவார்கள். இதற்கிடையே நேற்று காலை கரும்பாறை பகுதியில் தனியார் தோட்டத்தை ஒட்டியுள்ள சாலையின் ஓரத்தில் ஒரு ஆண் யானை நடந்து வந்தது. பின்னர் திடீரென அந்த யானை தரையில் சுருண்டு விழுந்தது. இதைப்பார்த்த அந்த பகுதிமக்கள் அழகியபாண்டியபுரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனசரகர் ஸ்ரீதர் தலைமையில் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுருண்டு விழுந்த யானையை பரிசோதனை செய்தனர். இதில் யானை இறந்து விட்டது தெரியவந்தது. உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நெல்லையில் இருந்து வந்த கால்நடை மருத்துவக்குழுவினர் யானையை பரிசோதனை செய்ததில் அதன் உடலில் காயங்கள் மற்றும் வாயில் புண் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து யானையை உடல் கூராய்வு செய்து அந்த இடத்திலேயே பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி புதைத்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அன்பு கூறுகையில், உடல் கூராய்வு பரிசோதனையில் யானையின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அது எப்படி இறந்தது என்பது தெரியவில்லை? எனவே உடல் கூராய்வு பரிசோதனை முடிவு வந்த பின்னரே யானை எப்படி இறந்தது என்ற விவரம் தெரியவரும். அதன் பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றார். சாலையோரத்தில் யானை சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் கீரிப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-collapses-and-dies-by-the-roadside-forest-department-investigating




