பெங்களூரு, மங்களூருவில் ஐகோர்ட்டு கிளை அமைப்பது குறித்து ஆராய 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐகோர்ட்டு கிளை கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த மே மாதம் 13-ந் தேதி சித்தராமையா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விபு பக்ருவுக்கு ஒரு கடிதம் எழுதி, தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஐகோர்ட்டு கிளை அமைக்குமாறும், இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 50 ஆயிரம் சதுரஅடி நிலத்தை ஒதுக்குவதாகவும் அதில் உறுதி அளிக்கப்பட்டது. இதற்கு பெங்களூரு வக்கீல்கள் சங்கம் ஆட்சேபனை தெரிவித்தது. தலைமை நீதிபதி உத்தரவு கர்நாடக அரசின் இந்த கோரிக்கையை ஐகோர்ட்டு ஆய்வு நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விபு பக்ரு, மங்களூருவில் ஐகோர்ட்டு கிளையை தொடங்குவது குறித்து ஆய்வு செய்ய 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவில் நீதிபதிகள் அனு சிவராமன், எஸ்.ஜி.பண்டிட், முகமது நவாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், மங்களூரு மட்டுமின்றி உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு-மடிகேரி, ஹாசன், தாவணகெரே, உத்தர கன்னடா ஆகிய இடங்களையும் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் அறிக்கை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஏற்கனவே பெங்களூருவில் ஐகோர்ட்டு முதன்மை அமர்வு உள்ளது. இது தவிர தார்வார், கலபுரகி ஆகிய இடங்களில் ஐகோர்ட்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஐகோர்ட்டு கிளை மேலும் மங்களூரு உள்பட கடலோர மாவட்டங்களில் இருந்து தலைநகருக்கு வரும் சாலை சீரானதாக இல்லை. வனப்பகுதி வழியாக வரும் சாலைகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் தலைநகருக்கு வர சிரமப்படுகிறார்கள். அதனால் அந்த பகுதி மக்களின் வசதிக்காக ஐகோர்ட்டு கிளையை மங்களூருவில் அமைக்க வேண்டும் என்று அரசு கோரியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/3-judge-panel-to-examine-setting-up-of-high-court-branch-in-mangaluru-chief-justice-orders




