உங்கள் உடலின் ஒரு பகுதி உங்களுக்குத் தெரியாமலே கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால், இதுதான் கசப்பான உண்மை! சர்க்கரை நோய் (Diabetes) உள்ள 10-ல் 3 பேருக்கு, அவர்களின் கால்களில் இதுதான் சத்தமில்லாமல் நடக்கிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கால்களின் நரம்புகளைப் பாதித்து மரத்துப்போகச் செய்கிறது. ஆரம்பத்தில் கால்களில் ஏற்படும் ஒரு சிறிய புண் அல்லது உராய்வு, வலி தெரியாததால் அலட்சியப்படுத்தப்பட்டு, கடைசியில் விரலையோ அல்லது காலையோ எடுக்க வேண்டிய ஆபத்தான நிலைக்குக் கொண்டு போய் விடுகிறது. இந்த ஆபத்திலிருந்து உங்கள் கால்களைப் பாதுகாக்க ஒரு அரிய வாய்ப்பு. பாதம் ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து வழங்கும் 'பாதமே நலமா? Season 3' சென்னையில் நடைபெறுகிறது. இந்தியாவின் முன்னணி பாத சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் கேசவன் மற்றும் பல மருத்துவ வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு, பாதப் பராமரிப்பு பற்றிய அத்தியாவசிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். உங்கள் சந்தேகங்களை மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவுபெறலாம். மேலும், பிரபல திரைக் கலைஞர் திரு. எஸ்.வி.சேகர் அவர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருக்கிறார். சென்னை மயிலாப்பூரிலுள்ள AIOBEU ஸ்வஸ்திகா திருமண ஹாலில் வரும் செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தொடங்குகிறது நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்! அதுமட்டுமின்றி, கலந்துகொள்ளும் அனைவருக்கும் ₹1,000 மதிப்புள்ள 'ஃபுட் கேர் கிட்' (Foot Care Kit) இலவசமாக வழங்கப்படும். இடங்கள் மிக மிகக் குறைவு என்பதால், உடனடியாக உங்கள் சீட்டை முன்பதிவு செய்யுங்கள்! உங்கள் வருகையைப் பதிவு செய்ய: அல்லது, உடனே அழைக்கவும்: 044 - 66802980 / 07 ஒரு சிறு போன் கால். உங்கள் பாதங்களின் ஆயுளைக் காப்பாற்றும்! இன்றே பதிவு செய்யுங்கள்! Doctor Vikatan: வருடக்கணக்கில் சிகரெட் பழக்கம், பலமுறை தோல்வி. உறுதியாக கைவிட10 ஆலோசனைகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/health/diabetes-awareness-programme-sponsored-by-anand-vikatan-and-rkdiabetic-institute




