திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 709 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 312 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 76 லட்சம் ஆகும். அன்று 3 லட்சத்து 97 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 26 ஆயிரம் பக்தர்கள் 3 வேளை அன்னப்பிரசாதம் பெற்றனர். 2 ஆயிரத்து 939 பக்தர்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/single-day-hundi-offerings-at-the-tirupati-temple-amounted-to-476-crore




