சென்னை: 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பையில் 14 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 57 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறும். புதிய முறையில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையின் தொடக்க கட்டமாக நமீபியாவின் வின்ட்ஹோக் நகரில் அக்டோபர் 2-ந் தேதி 3 அணிகள் பங்கேற்கும் ‘சூப்பர் சீரிஸ்’ போட்டிகள் தொடங்குகின்றன. அதன்பிறகு 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட 2 குழுக்களாக பிரிக்கப்படும். இந்தியா-பாகிஸ்தான் மோதல் ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் ஒரு தகுதிச்சுற்று அணி இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம் மற்றும் மற்றொரு தகுதிச்சுற்று அணி இடம்பெற்றுள்ளன.இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 10-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி எப்போது? இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7-ந் தேதி கேப்டவுனில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. குரூப் சுற்று போட்டிகளுக்கு பிறகு சிறப்பாக செயல்படும் அணிகள் ‘சூப்பர் 7’ சுற்றுக்கு முன்னேறும். அதன் பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும். 2027 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி நவம்பர் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/icc-cricket-world-cup-2027-schedule-announcement-live-india-to-begin-world-cup-vs-australia-on-october-7-india-vs-pakistan-on-this-date




