சென்னை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இயக்குநர் சேரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் இயக்குநர் பாக்யராஜ் நிரந்தர கௌரவத் தலைவராக கவுரவிக்கப்பட்டார். இந்த நிலையில், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers' Association) தலைவர் சேரன் மற்றும் புதிய நிர்வாகக் குழுவினர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைச் சந்தித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் - இயக்குனர் சேரன், பொதுச்செயலாளர் - பட்டுக்கோட்டை' பிரபாகர், பொருளாளர் - ஆர்.சுந்தர்ராஜன், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமிர்த்தமாக பெருமைமிகு மனிதரும் தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையுமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றோம். இன்றைய கதை ஆசிரியர்களின் நிலை பற்றி பேசி அதை எப்படி எல்லோருடனும் பேசி சுமூகமாக எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்படி கையாள எங்களுக்கு ஆலோசனை வழங்கினார். திரையுலகில் வள்ளி, பாபா உட்பட கதையாசிரியராகவும் அவர் பணியாற்றி இருப்பதால் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணையும்படி நாங்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று சம்மதமும் தெரிவித்தார். நேரம் ஒதுக்கி எங்களோடு உரையாடிய மாண்புமிகு மனிதருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்." என்று தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/office-bearers-of-the-south-indian-film-writers-association-meet-rajini



