கொச்சி கேரளாவில் அடுத்த 4 நாட்களாக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. இந்த மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட பகுதிகளில், 64 மி.மீ. முதல் 115 மி.மீ. வரை மழை பெய்ய கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. மழைப்பொழிவு குறைவு கேரளாவில் நடப்பு ஆண்டில் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மழை குறைவாக பெய்துள்ளது. இதன்படி, 28 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது என தெரிவித்தது. இதனால், கடந்த 2 மாதங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், மின் நுகர்வும் அதிகரித்து உள்ளது. பல்வேறு இடங்களில் மின் வெட்டும் ஏற்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/heavy-rain-to-lash-kerala-for-next-4-days-imd




