சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி உள்ளது. சென்னையின் நுழைவு வாயில் போல அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்து வரும் நிலையில், தற்போது பரனூர் சுங்கச்சாவடியில் தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் தானாகவே வசூலித்துக்கொள்ளும் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இனிமேல் வாகனங்கள் செல்லும் போதே சுங்கச்சாவடிக்கான கட்டணம் அவர்களின் பாஸ்டேக்கில் இருந்து பிடித்துக்கொள்ளப்படும். இதற்காக சுங்கச்சாவடிக்கு முன்பாக சில மீட்டர்கள் தொலைவில் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களின் எண் உள்ளிட்டவை துல்லியமாகப் படம் பிடிக்கப்பட்டு, வாகனத்திற்கான சுங்கக் கட்டணம் பிடித்துக்கொள்ளப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-vehicles-to-stop-at-paranur-toll-plaza-new-technology-for-toll-collection




