திருச்சி, பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால். பாலக்காடு, மயிலாடுதுறை ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் டெமு ரெயில் திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:- நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை திருச் சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி -காரைக்கால் டெமு ரெயில் (எண்:76820) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. அதுபோல் மறுமார்க் கத்தில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படவேண்டிய காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண்:76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது. பாலக்காடு ரெயில் அதுபோல் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கரூர்-மூர்த்திபாளையம் இடையே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) வருகிற 10-ந்தேதி, 12-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய நாட்களில் புகழூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் திருச்சிக்கு வராது. அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக புகழூரில் இருந்து இயக்கப்படும். மேலும் வருகிற 10-ந்தேதி, 15-ந்தேதி. 17-ந்தேதி ஆகிய நாட்களில் இந்த ரெயில் போத்தனூரில் இருந்து தான் காலை 7.55 மணிக்கு புறப்படும். பாலக்காட்டில் இருந்து புறப்படாது. அதுபோல் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) நாளை (புதன்கிழமை), 14-ந்தேதி, 16-ந்தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக் கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் பாலக்காடு டவுன் செல்லாது. தாமதம் அதுபோல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்:56817) 15 நிமிடமும், 12-ந்தேதி, 15-ந்தேதிகளில் திருச்சி-மயிலாடுதுறை மெழு எக்ஸ்பிரஸ் (எண்:16834) 30 நிமிடமும், நாளை (புதன்கிழமை) முதல் 11-ந்தேதி வரை காரைக்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56836) 30 நிமி டமும், 15-ந்தேதி ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56106) 50 நிமி டமும், காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56832) 40 நிமிடமும் தாமதமாக செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-palakkad-mayiladuthurai-train-services




