நெல்லை, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய தினம் சனிக்கிழமை என்பதால் இந்த 2 நாட்கள் விடுமுறையில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியிடங்களில் இருந்து நெல்லை உள்ளிட்ட தங்கள் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டு வருகின்றனர். தீபாவளி தீபாவளியை ஒட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் வருகிற 6-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, நவம்பர் 5-ந் தேதி அன்று சொந்த சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர். வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நவம்பர் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்ளை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புறப்பட விரும்புவோர், வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். முன்பதிவு தீபாவளியை ஒட்டி ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர் பெரும்பாலும் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் அதிகமாக முன்பதிவுகளை மேற்கொள்வர். எனவே தீபாவளி முன்பதிவுக்கு பயணிகள் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மறுமார்க்கத்தில் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்வோர் வரும் 9-ந்தேதி முதல் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி முடிந்து மறுதினமே பணிக்கு செல்வோர். தீபாவளி தினமான நவம்பர் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே புறப்பட வேண்டும். அதற்கு வருகிற 9-ந் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி 9-ந் தேதி (திங்கள் கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டால், அன்று மாலையில் பலர் நகரங்களுக்கு புறப்பட்டு செல்வர். அதன்படி நவம்பர் 9-ந் தேதி சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு செல்வோர். வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) முன்பதிவு செய்ய வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால், முக்கிய ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-those-traveling-to-their-hometowns-for-diwali-southern-railway-has-announced-a-pleasant-surprise




