கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்தக் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குட்டையை தூர்வாரும் பணியை துவக்கி வைக்க சூலூர் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் வருகை தந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் சுகுமாரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சட்டமன்ற உறுப்பினர் உடன் வந்த த.வெ.க கட்சிக்காரர்கள் முன்னிலையில் குட்டையை தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் இதனால் பொதுமக்களுக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், எம்.எல்.ஏ-வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். அப்போது ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சிலர் சட்டமன்ற உறுப்பினரை நோக்கி கல் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக இருந்த போலீஸார் பொதுமக்கள் மீது லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து குட்டை தூர்வாரும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டதால், அதனை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இந்தக் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விட வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை எனக் கூறி சட்டமன்ற உறுப்பினர் அங்கேயே அமர்ந்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. பொதுமக்கள் போராட்டம் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “70 ஏக்கர் பரப்பிலான இந்தக் குட்டை பகுதி மக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது. குட்டையில் மழை காலங்களில் தேங்கும் நீரை வைத்து விவசாயம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் தற்போது கழிவுநீரை கொண்டு வந்துவிட்டால், அதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நிலத்தடி நீரின் தன்மை மாறக்கூடும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குட்டையில் நிரப்பக் கூடாது” என தெரிவித்தனர். ’என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா’ –அமைச்சர் கீர்த்தனாவின் ஆபரேசன் குறித்து கனிமொழி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/public-pelt-stones-at-sulur-tvk-mla-in-combatore




