காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான பிரச்னை சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு இடையே எழுந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகிற 3-ம் தேதி, இது தொடர்பாக பேச கர்நாடகா செல்வதாக இருந்தது. ஆனால், இப்போதைக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று பேசியிருக்கிறார். விஜய் கத்திபாரா ஆய்வுஃபேஸ்புக்கில் பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு பதிவு! கனிமொழி பதிவு விஜய் கர்நாடகா செல்வதாக இருந்ததற்கும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்தச் சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம். மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்". சமீபத்தில் சென்னை கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை விஜய் ஆய்வு செய்ததை வைத்து தான் கனிமொழி அவரை சாடியுள்ளார். எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம். மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை… — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 31, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/kanimozhi-slams-vijay-over-cauvery-river-dispute




