சென்னை, திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று வந்தார். திடீரென்று தலைமைச் செயலகத்தின் எதிரில் நின்ற நிலையில் தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, கையில் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்து, உடலில் தண்ணீரை ஊற்றினர். திடீர் பரபரப்பு இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், ‘ஏற்கனவே முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, என்பதால் டீசலை ஊற்றிக் தற்கொலைக்கு முயன்றதாக' கூறினார். தொடர்ந்து கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-caused-by-a-woman-attempting-self-immolation-in-front-of-the-secretariat




