பாபநாசம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.14.64 லட்சம் கிடைத்துள்ளது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. நாகர்கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா, சரக ஆய்வாளர் கோமதி கோவில் செயல் அலுவலர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலையில் தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் மொத்தம் ரூ.14 லட்சத்து 64 ஆயிரத்து 861 காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 51 கிராம் 960 மில்லி கிராமும், வெள்ளி பொருட்கள் 243 கிராம் 200 மி.கிராமும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/rs-1464-lakhs-of-money-offerings-at-karaiyar-sorimuthu-ayyanar-temple




