இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். என்ன காரணம்? 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் (சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது ஆகும். கைது"இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" - ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கத்தான் தற்போது நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரைக் காவலில் எடுக்க கொழும்பு தலைமை நீதிபதி அஸங்க போதரகம உத்தரவிட்டிருக்கிறார். இந்த ஒப்பந்த லஞ்சக் குற்றச்சாட்டில் இவர் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதியான 8 லட்சம் டாலர்களை நாமல் பெற்றிருக்கிறார். நாமல் விண்ணப்பித்த ஜாமீன் மனுவும் மறுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் முன்னெடுப்பு ராஜபக்சே குடும்பம் தங்களது அடுத்த அரசியல் வாரிசாக நாமலைத்தான் முன்னெடுக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/namal-rajapaksa-arrested-over-alleged-airbus-bribery-case




