சென்னை, தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தண்ணீர் திறக்க ஆணை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரையும் சேர்த்து வினாடிக்கு 350 கனஅடி தண்ணீரை பெரியாறு அணையிலிருந்து 08.08.2026 முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப மொத்தம் 3,629 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் தாலுக்காக்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-release-of-water-from-theni-periyar-dam




