சென்னை, தற்போது மோகன்லால் படத்தில் இடம்பெறவில்லை என்றும், அவருக்குப் பதிலாக ‘மார்கோ’ படப் புகழ் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஷாலினி தயாரிப்பு - அனிருத் இசை அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. நவம்பரில் தொடங்கும் படப்பிடிப்பு ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. மோகன்லாலுக்கு பதிலாக உன்னி முகுந்தனா? இந்த நிலையில், தற்போது மோகன்லால் படத்தில் இடம்பெறவில்லை என்றும், அவருக்குப் பதிலாக ‘மார்கோ’ படப் புகழ் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லாலுக்காக பேசப்பட்ட அதே கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடந்தால், அஜித்குமார் - உன்னி முகுந்தன் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக இது அமையும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், மோகன்லால் படத்தில் இருந்து விலகியதாகவும், உன்னி முகுந்தன் இணைந்துள்ளதாகவும் வெளியாகும் தகவல்களுக்கு படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதி அளிக்கப்படவில்லை. மேலும், கிச்சா சுதீப், உபேந்திரா உள்ளிட்ட கன்னட நடிகர்களுடனும் முக்கிய கதாபாத்திரங்களுக்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/marco-hero-to-team-up-with-ajith-a-new-change-in-the-movie-daredevil



